தனியுரிமை அறிவிப்பு
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 11 அக்டோபர் 2026
இந்த அறிவிப்பு இந்த இணையதளத்துக்குப் பொருந்தும். எண்ணிம தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023-இன் கீழ் சென்னை BluTek Consulting இதை வெளியிடுகிறது.
நீங்கள் செயல்விளக்கம் கோரும்போது உங்கள் பெயர், அமைப்பு, மாநிலம், பொறுப்பு, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், செய்தி ஆகியவற்றைப் பெறுகிறோம். உங்களுக்குப் பதிலளிக்கவும் செயல்விளக்கத்தை ஏற்பாடு செய்யவும் மட்டுமே இவற்றைப் பயன்படுத்துகிறோம்.
உங்கள் கோரிக்கை மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்பப்படுகிறது. இணையதளம் அதைச் சேமிப்பதில்லை; வேறு எவருடனும் நாங்கள் பகிர்வதில்லை.
உங்களுடன் தொடர்பில் இருக்கும் வரை அந்த மின்னஞ்சலை வைத்திருப்போம்; கோரிக்கையின் பேரில் நீக்குவோம். உங்கள் விவரங்களைப் பார்க்க, திருத்த அல்லது நீக்க, கீழே உள்ள முகவரிக்கு எழுதுங்கள்.
தானியங்கி ஸ்பேமைத் தடுக்க இந்த இணையதளம் Cloudflare Turnstile-ஐப் பயன்படுத்துகிறது. விளம்பர அல்லது கண்காணிப்பு குக்கீகள் எதையும் அமைப்பதில்லை.
TailRegister பயன்பாட்டில் வைக்கப்படும் திட்டப் பதிவுகள், திட்டத்தை நடத்தும் அமைப்புடனான ஒப்பந்தத்தின்படி நிர்வகிக்கப்படுகின்றன; இந்த அறிவிப்பின்படி அல்ல.
தனியுரிமைக் கோரிக்கைகளுக்குத் தொடர்புகொள்ள: anand@blutek.consulting